துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 1% மேல் உயர்வு!

சென்செக்ஸ் 879.09 புள்ளிகள் உயர்ந்து 72,472.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 288.65 புள்ளிகள் உயர்ந்து 22,520.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

stock market

கோப்புப் படம்

Published On :

மும்பை: கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கடும் சரிவுக்குப் பிறகு, இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை மீண்டெழுந்தன. டிசிஎஸ் மற்றும் பிற ஐடி துறைப் பங்குகளின் ஏற்றமும், கச்சா எண்ணெய் விலை சரிவால், சென்செக்ஸ் 879 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 22,520.45 புள்ளிகளை எட்டியது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,075.96 புள்ளிகள் அதிகரித்து 72,669.20 புள்ளிகள் வரை சென்றது. பிறகான வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 879.09 புள்ளிகள் உயர்ந்து 72,472.33 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 288.65 புள்ளிகள் உயர்ந்து 22,520.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

இன்று ஐடிசி 4.78 சதவீதம் உயர்தன. அதனை தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 4.23 சதவீதம் ஏற்றம் கண்டது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2 வது காலாண்டிற்கான அதன் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 13,884 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்தது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்தன.

சமீபத்திய சரிவுக்குப் பிறகு, மதிப்பு சார்ந்த பங்குகள் கொள்முதலும் மற்றும் ஷார்ட் கவரிங் உள்ளிட்டவையால், உள்ளூர் பங்குச் சந்தை மீட்சிப் பாதைக்கு திரும்பியது. நிறுவனங்களின் 2 வது காலாண்டு வருவாய் அறிவிப்பும், வலுவான தொடக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வருவாய் வாய்ப்புகள் மீதான நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், ஐடி துறைப் பங்குகள் சிறப்பாதக செயல்பாட்டை வெளிப்படுத்தின.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தேர்தலுக்கு முன் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற அறிகுறிகளைத் தொடர்ந்து, பதற்றம் தணிந்தன. இது கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியது.

ஆசியச் சந்தையை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தது. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங் செங் குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன. தென் கொரிய பங்குச் சந்தை விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடனேயே முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ. 12,943.58 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.32 சதவீதம் குறைந்து 102.9 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Indices bounced back on Friday after two days of sharp decline.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.