டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 96 காசுகள் உயர்ந்து ரூ. 95.75 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு நிகராக ரூ. 95.75 என்ற அளவில் நிறைவு பெற்றது.

மும்பை: ரூபாய் மதிப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி, வார இறுதியில் பல நடவடிக்கைகளை எடுத்ததையடுத்து, ரூபாய் மதிப்பு 96 காசுகள் உயர்ந்து. இது ஆறு மாதங்களுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு ஒரே நாளில் உச்சத்தை பதிவுசெய்தது, டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.75 என்ற அளவில் நிறைவடைந்தது.
ஸ்பாட் சந்தையில் டாலருக்கான தேவையைக் குறைத்து, அந்நியச் செலாவணி நிலையைக் கட்டுப்படுத்தியதன் மூலம், குறுகிய நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த மீட்சியானது கச்சா எண்ணெய் விலை பொறுத்தே அமையும் என்றனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.61 என்ற அளவில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 95.57 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 95.96 என்ற அளவை எட்டியது. வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் முடிவை விட 96 காசுகள் உயர்ந்து ரூ. 95.75 ஆக நிலைபெற்றது. இதுபோன்ற ஒரு செங்குத்தான ஒற்றை நாள் ஏற்றம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று பதிவானது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ. 96.71 ஆக இருந்தது.
Summary
The rupee appreciated 96 paise, its steepest single-day gain in more than six months, to close at 95.75.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

