டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.51 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.51 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய் | கோப்புப் படம்
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு, உள்நாட்டு பங்குச் சந்தையின் தொடர் எழுச்சி மற்றும் வெளிநாட்டு நிதி வரவு ஆகியவற்றால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.51 ஆக நிலைபெற்றது. இருப்பினும் வலுவான நிலையில் உள்ள டாலர் மற்றும் அமெரிக்கப் பத்திர வருவாய் உயர்வால் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு நிதி வரவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை இந்திய ரூபாய்க்கு ஆதரவளிப்பதாகவும், அதே நேரத்தில் வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க வருவாய் உள்ளிட்டவை முக்கிய சவால்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 93.72 ஆக தொடங்கி பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ. 93.40 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 93.73 ஆகவும் இருந்தது. வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.51 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 93.94 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


