மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!

மதுரை நகைக் கடை கொள்ளை சம்பவம் குறித்து பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதிலளித்த காவல்துறை ஆணையர்

Madurai jewellery showroom heist: Prime accused Nishanth taken for medical exam ahead of court production; Entire 11.4 Kg loot recovered

மதுரை காவல் நிலையம் - ஏஎன்ஐ

Updated On :

மதுரையில் நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகளை காட்சிப்படுத்திய காவல்துறையினர், இன்று செய்தியாளர்களை சந்தித்து கொள்ளைச் சம்பவம் குறித்து விளக்கினர்.

மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை காவலில் எடுத்து விசாரித்த பிறகே தகவல்கள் தெரியவரும் என்று பதிலளித்துள்ளார்.

மதுரை நகைக் கடையிலிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்தது தொடா்பாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞர் நிஷாந்திடமிருந்து 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே, கைதான மீனாட்சி கொடுத்த தகவலின்படி 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 11.384 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டட வேலை முடியாமல், கடை திறக்கப்பட்டது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதால், தீபாவளி காலம் என்பதால் கட்டட வேலை முடிவதற்கு முன்பே கடை திறக்கப்பட்டதாகவும், நகைக் கடையின் பின்புறம் சிசிடிவி இல்லை இல்லை, கடையைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க உத்தரவிடப்படும் என்றும் கூறினார்.

கைது செய்யப்பட்ட தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி உள்ளிட்டோரை விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இதில் வேறு யாருக்காவதுதொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.

கொள்ளைக்கு முன் 2 முறை, நகைக் கடைக்கு வந்து நோட்டமிட்ட நிஷாந்த், வேறு மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருந்தாரா? என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும்.

இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்கு கொள்ளைச் சம்பவம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறது, வசதியாக வாழ்வதற்காக கொள்ளையடித்ததாக முதற்கட்ட விசாரணையில் நிஷாந்த் கூறியிருக்கிறார். காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல் வெளியாகும்.

அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுவிட்டன. கொள்ளையடித்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி இருக்கும், யூடியூப் மூலம் அவர் கொள்ளையடிக்கும் பாணியை கற்றுக்கொண்டாரா என்று கேட்டதற்கு, அவர் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை செய்தால்தான் தெரிய வரும் என்று கூறினார்.

மேலும், மதுரை காவல்துறையில் சமூக வலைத்தளத்தை கண்காணிக்க ஒரு குழு உள்ளது. ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்துப் போடுபவர்களை எல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் காவல்துறை ஆணையர்.

இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவத்தில் ஒரே ஒருவர்தான் ஈடுபட்டாரா? என்ற கேள்விக்கு, இளைஞரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.