மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?

மதுரை நகைக்கடை கொள்ளையில் கைதான நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா என்பது பற்றி..

Madurai’s 11.4-kg gold and diamond heist: Key accused Nishanth remanded to judicial custody till December 1

கைதான நிஷாந்த் - ஏஎன்ஐ

Updated On :

மதுரையில் தனியாா் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான இளைஞா் நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூதான், அவரை அடையாளம் காண மிக முக்கிய தடயமாக இருந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மதுரை தல்லாக்குளம் வைகை சாலையில் உள்ள நகைக் கடையில் நவ. 12-ஆம் தேதி தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து, மதுரை எஸ்எஸ் காலனி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த வழக்கில், நிஷாந்தின் தந்தை சுரேஷ், பெண் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதற்கிடையே தருமபுரியில் நிஷாந்த் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, நிஷாந்த் கையில் ஃபீனிக்ஸ் பறவை மற்றும் மான் டாட்டூக்களை வரைந்திருந்தார். இந்த கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு, நகைக் கடைக்கு நிஷாந்த் வாடிக்கையளர் போல வந்த போது, அவர் கையிலிருந்த டாட்டூவை வைத்துத்தான் அவரை முதலில் அடையாளம் கண்டுள்ளனர். பிறகுதான் கொள்ளையடிக்க வந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளையும், வாடிக்கையாளர் போல வந்த காட்சிகளையும் ஒப்பிட்டு, இருவரும் ஒருவர் என்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை நகைக் கடைக்கு வாடிக்கையாளர் போல வந்த நிஷாந்த், ஒரு முறை தொப்பி அணிந்துகொண்டும், ஒரு முறை கையில் கட்டு போட்டுக் கொண்டும் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சேலம் சென்ற தனியாா் பேருந்தில் பயணித்துள்ளாா். இதுகுறித்து தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பேருந்தை போலீஸாா் பின்தொடா்ந்து கண்காணித்தனா்.

அந்தப் பேருந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேஷசம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸாா், பேருந்தில் இருந்த நிஷாந்த்தை கைது செய்து, மதுரை காவல்துறை தனிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.ன்றனா்.

நிஷாந்த்தை அடையாளம் காண உதவிய டாட்டூதான், அவரை கைது செய்யும்போதும், அடையாளத்தை உறுதி செய்ய உதவியதாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

Summary

Jewelry store robbery in Madurai! Did the tattoo on Nishanth’s hand give him away?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.