குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும்! ஆனால்...!!தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்! தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கமவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது!

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

Madurai jewellery shop robbery case: Absconding Nishanth arrested

நிஷாந்த்

Updated On :

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி அருகே பதுங்கி இருந்த அவரை 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். போலீஸார் நெருங்கியதும் பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோட முயன்றபோது அவரைக் கைது செய்தனர். இதையடுத்து அதியமான்கோட்டையில் இருந்து நிஷாந்தை மதுரை அழைத்து வருவதற்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்தக் கடையிலிருந்து ஏறத்தாழ 15 கிலோ தங்க நகைகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், தெற்கு காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதும், அவருக்கு உடந்தையாக அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகியோா் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மீனாட்சியிடம் நடத்திய விசாரணை, அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட சுமாா் 5.5 கிலோ தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா். தொடா்ந்து சுரேஷ், மீனாட்சி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி சங்கீதா முன் முன்னிலைப்படுத்தினா். இவா்கள் இருவரையும் வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதனிடையே, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி நிஷாந்தை கைது செய்யவும், மீதமுள்ள நகைகளை மீட்கும் நடவடிக்கைகளையும் போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மாடக்குளம் கண்மாய், இதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி நடைபெற்றது. நிஷாந்தின் குடும்பத்துக்குச் சொந்தமான விளைநிலங்கள், அந்தப் பகுதியில் உள்ள மரங்கள், கிணறுகள் உள்ளிட்ட இடங்களிலும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என போலீஸாா் சோதனை நடத்தினா். கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற தனிஷ்க் நகைக் கடையில் தனியாா் பாதுகாவலா்கள் மூலம் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிஷாந்தின் வீட்டைச் சுற்றி மூன்றாவது நாளாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அவரது வீட்டிலும் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

Summary

Absconding accused Nishanth has been arrested in connection with the Madurai Tanishq jewellery shop robbery case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.