குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும்! ஆனால்...!!தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்! தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கமவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!

குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்

குற்றவாளிகளின் கூடாரம் என்று தவெகவை மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்பிலிருந்து..

Updated On :

குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

தவெகவின் கடந்த 6 மாத கால ஆட்சியில், அக்கட்சியின் நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து ஆங்கில ஊடகத்தில் இன்று கட்டுரை வெளியாகியுள்ளது.

இதில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

“த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் ஹோல்சேல் (Wholesale) கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த கட்டுரை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், தவெக நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த மு.க. ஸ்டாலின்,

“சட்டம் - ஒழுங்கு ஐசியூ-வில். ஆட்சி நிர்வாகம் கோமாவில். ஒரே நாளில் 17 கொலைகள். குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக மீது குற்றச்சாட்டு.

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை, காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை, த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

மொத்தத்தில், பகுதிநேர முதலமைச்சராகவும், முழுநேர கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்குப் பொறுப்பே இல்லை” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

TVK has become a ‘wholesale’ den for criminals! – M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.