சென்னைக்கு 720 கி.மீ. தொலைவில்... இன்று மாலை புயலாக வலுப்பெறும்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் குறித்து...
இந்திய வானிலை மையம் புகைப்படம் - IMD
சென்னைக்கு 720 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று (நவம்பர் 16, 2026) காலை 05:30 மணி நிலவரப்படி, இது அதே பகுதியில், அதாவது 11.0° வடக்கு அட்சரேகை மற்றும் 86.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இது திரிகோணமலையிலிருந்து (இலங்கை) கிழக்கு - வடகிழக்கே சுமார் 630 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) மேற்கே 680 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) கிழக்கு - தென்கிழக்கே 720 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு - தென்கிழக்கே 820 கி.மீ தொலைவிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) தெற்கே 940 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (நவ. 16) மாலை வேளையில், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் இது தீவிரமடைந்து 'புயலாக' (Cyclonic Storm) மாறக்கூடும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 17 மாலை வேளையில், மேற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியில் இது மேலும் தீவிரமடைந்து 'தீவிரப் புயலாக' (Severe Cyclonic Storm) மாற வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19 இரவில், ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில் உள்ள மேற்கு - மத்திய வங்கக் கடல் பகுதியை 'அதி தீவிரப் புயலாக' (Very Severe Cyclonic Storm) வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

