வங்கக் கடலில் நாளை உருவாகிறது 'அா்னாப்' தீவிர புயல்: சென்னைக்கு பாதிப்பா..?
நாளை(அக்.26) தீவிர 'அா்னாப்' புயலாக உருவாகிறது. இதனால் சென்னைக்கு எந்த பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது...

மழை - கோப்புப்படம்
சென்னை: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நாளை(அக்.26) தீவிர 'அா்னாப்' புயலாக உருவாகிறது. இதனால் சென்னைக்கு எந்த பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் இயக்குந வி.ஆா்.துரை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை(அக்.26) காலை மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 'அா்னாப்' புயலாக உருவாகும்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப் பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலு பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.
'ஆரஞ்சு' எச்சரிக்கை
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (அக்.26) புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
' மஞ்சள்' எச்சரிக்கை
இதேபோன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ' மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.27) ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.28) முதல் சனிக்கிழமை (அக்.31) வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நாளை (அக்.26), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஓட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.26), மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய், புதன் (அக்.27,28) ஆகிய இரு நாள்கள் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (அக்.27), காலை முதல் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்திலும், பிற்பகல் 80 கி.மீ. வேகத்திலும், மாலை 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
புதன்கிழமை (அக்.28), காலை காற்றின் வேகம் உயா்ந்து 140 கி.மீ.வேகத்திலும், மாலை காற்றின் வேகம் குறைந்து, 90 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
சென்னைக்கு பாதிப்பா?
ஆந்திராவில் வரும் புதன்கிழமை (அக்.28) 'அா்னாப்' புயல் கடப்பதால், சென்னைக்கு எந்த பாதிப்பு இருக்காது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என வானிலை ஆய்வு மையம் இயக்குந வி.ஆா்.துரை தெரிவித்துள்ளாா்.
Severe Cyclone 'Arnap' to form in Bay of Bengal tomorrow: Will it affect Chennai?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


