தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து பிரதமர் மோடி இன்று பிலிப்பின்ஸ் பயணம்! தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கமவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!

சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும்! ஆனால்...!!

சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும் ஆனால் புயல் கரையைக் கடப்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை..

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Updated On :

சென்னைக்கு புயல் வருமா? வராதா? என்ற கேள்விகளுக்கு இடையே, செவ்வாய்க்கிழமை சென்னையில் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நெருங்கி வந்து ஆந்திரம் அருகே கரையைக் கடக்குமா? அல்லது சென்னையிலேயே கரையை கடக்குமா? என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் மழைக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலையிலேயே சென்னையில் மழை பெய்யுமா? பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கலாம் என்ற ஒரே மகிழ்ச்சியில் மாணவர்கள் பலரும் பள்ளிக்குச் சென்றிருக்கலாம்.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த மூன்று நாள்களும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து, தெற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் இன்று ‘அக்வான்’ புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

heavy Rain to very heavy rain is set to fall in Chennai starting tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.