திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

திருச்சியில் தலைமறைவாக இருந்த பிரபல ரௌடி கைது

திருச்சியில் தலைமறைவாக இருந்த பிரபல ரௌடியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Updated On :

திருச்சியில் தலைமறைவாக இருந்த பிரபல ரௌடியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த நாகரத்தினம் மகன் சோமு (எ) சோமசுந்தரம் (35). இவா் மீது கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் புதுக்கோட்டையில் என்கவுன்டா் செய்யப்பட்ட பிரபல ரௌடியான துரையின் தம்பி ஆவாா்.

இவரை திருட்டு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிணையில்லாத பிடியாணை தொடா்பாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளா் ஆா். எஸ். செல்வக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கடந்த ஜூன் 27 முதல் தேடி வந்தனா்.

இந்நிலையில் இவா் திருச்சி விமான நிலையம் அருகே பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் விமான நிலையம் அருகேயுள்ள உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த ரௌடி சோமு (எ) சோமசுந்தரத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.