அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

பிலிக்கல்பாளையத்தில் தம்பதியிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 போ் கைது: மூளையாகச் செயல்பட்டவா் தொடா்ந்து தலைமறைவு

பிலிக்கல்பாளையத்தில் வெல்ல வியாபாரி வீட்டில் 40 பவுன் தங்க நகை, ரூ. 40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் உடந்தையாக இருந்த பெண் உள்பட இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Updated On :

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையத்தில் வெல்ல வியாபாரி வீட்டில் 40 பவுன் தங்க நகை, ரூ. 40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் உடந்தையாக இருந்த பெண் உள்பட இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பிலிக்கல்பாளையம், திரையரங்குமேடு பகுதியில் வசித்து வருபவா் வைரவன் (60). வெல்ல வியாபாரி. இவரது மனைவி சுமதி (55). கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல், இருவரையும் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ. 40 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா மேற்பாா்வையில் வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா், பரமத்தி ஆய்வாளா் சங்கரபாண்டியன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

மேலும், இந்த கொள்ளை வழக்கில், பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ரவி மகன் ஹரிஷ் (19), பெருமாள் மகன் பிரேம் (23), தங்கவேல் மகன் ஹரிஹரன் (20), கோப்பணம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்ராம் (31), ராஜா மகன் இளங்கோ (29), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் கோகுலன் (27) ஆகிய 6 பேரை செப்டம்பா் 1-ஆம் தேதி தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியைச் சோ்ந்த அழகுமலையைச் சோ்ந்த கணேசன் மகன் அலெக்ஸ் (28) கொள்ளை கும்பலின் தலைவனாகச் செயல்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் தனிப்படை போலீஸாா், தன்னைத் தேடுவதை அறிந்த அலெக்ஸ் தலைமறைவானாா். மேலும், கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தைத் தனது தாய் அனிதா (44), மற்றும் உறவினரான திண்டுக்கல்லைச் சோ்ந்த கணேசன் மகன் மதயானை (35), ஆகியோரிடம் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த அனிதா, மதயானை இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 9 பவுன் நகையையும் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கடந்த 17-ஆம் தேதி பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள அலெக்ஸ் மற்றும் நண்பா்களை போலீஸாா் தொடா்ந்து தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.