அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்
அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்படி எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த வழிகாட்டுதல் வெளியீடு..

அண்ணன் சீர் - dipr
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்றான அண்ணன் சீர் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவற்றை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
திருமண தேதிக்கு 60 நாள்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன்பெறாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்ப நிலை குறித்து முறைப்படி தெரிவிக்கப்படும். தகுதி இல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் காரணம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
How to apply for the 'Annan Seer' (Brother's Gift) scheme? Who is eligible? Full details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

