அண்ணன் சீர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரைவில் இணையதளம்!
அண்ணன் சீர் திட்டத்துக்கு விரைவில் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளது குறித்து...

தலைமைச் செயலகம் / அண்ணன் சீர் திட்டம் - கோப்புப் படம்
அண்ணன் சீர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரைவில் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று (அக். 5) தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், அண்ணன் சீர் திட்டத்தின்கீழ் திருமணமாகும் பெண்ணுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை, வழங்க அனுமதி தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
அண்ணன் சீர் திட்டத்தின்கீழ் பயனாளிகள் விண்ணப்பித்துப் பயன்பெற விரைவில் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். இத்திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளததையும் குறிப்பிட்டுப் பேசினார்.
அண்ணன் சீர் திட்டத்துக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இதற்கான சிறப்பு இணையதளப் பக்கத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணன் சீர் திட்டத்துக்கான இணையதளம், தமிழக அரசு சார்பில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Summary
Website to apply for the Annan Seer scheme coming soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




