
இதுதான் மாற்றமா? அண்ணன் சீர் திட்டத்தில் ஆண்டு வருமானம் குறைக்கப்பட்டதா?
அண்ணன் சீர் திட்டத்தில் ஆண்டு வருமானம் குறைக்கப்பட்டது குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
அண்ணன் சீர் திட்டத்தில் குடும்ப வருமானம் ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக தவெக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக ‘அண்ணன் சீா்’ திட்டம் இருந்தது. இந்தத் திட்டம் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெண்கள் பயனடைவர் என தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்துக்காக ரூ. 812 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தவெக அரசு இன்று (அக். 6) வெளியிட்டுள்ள அரசாணையில் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் ரூ. 5 லட்சம் எனக் கூறிவிட்டு, அரசாணையில் ரூ. 2.5 லட்சம் என தவெக அரசு மாற்றியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் ரூ. 5 லட்சமாக இருந்த ஆண்டு வருமான உச்ச வரம்பு, அரசாணையில் ரூ. 2.5 லட்சமாகச் சுருக்கப்பட்டிருப்பதாக, 'அண்ணன் சுருக்குத் திட்டம்' என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சித்துள்ளார்.
à®à®£à¯à®£à®©à¯ à®à¯à®°à¯ திà®à¯à®à®®à¯ :
— I.S.INBADURAI (@IInbadurai) October 6, 2026
à®à¯à®à¯à®®à¯à®ª à®à®£à¯à®à¯ வரà¯à®®à®¾à®©à®®à¯ à®°à¯.5 லà®à¯à®à®®à¯ வர௠à®à®³à¯à®³ மணபà¯à®ªà¯à®£à¯à®à®³à¯à®à¯à®à¯ வழà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯ à®à®© @TVKVijayHQ தà¯à®°à¯à®¤à®²à¯ à®à®±à®¿à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ வாà®à¯à®à¯à®±à¯à®¤à®¿ à®à®³à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯.
à®à®©à®¾à®²à¯, தறà¯à®ªà¯à®¤à¯ @CMOTamilnadu வà¯à®³à®¿à®¯à®¿à®à¯à®à¯à®³à¯à®³ à®à®°à®à®¾à®£à¯à®¯à®¿à®²à¯ à®à®£à¯à®à¯ வரà¯à®®à®¾à®© வரமà¯à®ªà¯ à®°à¯.2.5 லà®à¯à®à®®à¯ à®à®© à®à®±à®¿à®µà®¿à®ªà¯à®ªà¯.
தà¯à®°à¯à®¤à®²à¯â¦ pic.twitter.com/JIOhkzDfr2
Summary
The annual income limit under the 'Annan Seer' scheme was reduced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





