டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பேரவைத் தேர்தலைவிட குறைவாகப் பதிவாகும் வாக்குகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து...

By-election

வாக்குப்பதிவு - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவைத் தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் பகல் 3 மணியளவில் பதிவான வாக்குகளைவிட இடைத்தேர்தலில் குறைவாகவே பதிவாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுதவிர, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளுக்கும் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி,

மதுராந்தகம் - 70.31%

தாராபுரம் - 68.08%

தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) - 68.91%

நந்திகிராம் (மேற்கு வங்கம்) - 71.79%

ரெஜிநகர் (மேற்கு வங்கம்) - 69.29%

நாகோன் மக்களவை தொகுதி (அஸ்ஸாம்) - 70.25%

அனைத்து தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாராபுரம் தொகுதியில் பகல் 3 மணியளவில் 75.61 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போதைய இடைத்தேர்தலில் 68.08 சதவிகித வாக்குள் மட்டுமே பதிவாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தாராபுரம் இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 7.43 சதவிகித வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

இதேபோல், மதுராந்தகம் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 72.41 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இடைத்தேர்தலில் 70.31 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்தத் தொகுதியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 2.1 சதவிகிதத்துக்கு குறைந்துள்ளன.

Summary

By-election status in Maduranthakam and Dharapuram constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.