இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்து...

By-elections in Maduranthakam and Dharapuram

மதுராந்தகம் தொகுதியில்... - X | CEO

Published On :

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகித விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக். 6) நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் வாக்குப் பதிவு நிறைவில் 85.97 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவிகித அளவுக்கு வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 85.97 சதவிகிதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், தாராபுரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 89.89 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 80.31 சதவிகிதம் மட்டுமே பதிவாகியுள்ளது.

இவ்விரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் (அக். 9) வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.

Summary

By-election: 85.97% voter turnout in Maduranthakam, 80.31% in Dharapuram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER