இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

ஏப்ரல் - அக்டோபர்! மரகதம் குமரவேல் பிரமாணப் பத்திரத்தில் இவ்வளவு பெரிய மாற்றமா?

ஏப்ரல் - அக்டோபர் மாதத்துக்குள் மரகதம் குமரவேல் பிரமாணப் பத்திரத்தில் இவ்வளவு பெரிய மாற்றமா?

மரகதம் குமரவேல் - முதல்வர் விஜய்

மரகதம் குமரவேல் - முதல்வர் விஜய்

Published On :

மதுராந்தகத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலின் பிரமாணப் பத்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் நடந்த பேரவைத் தேர்தலின்போது ஏப்ரல் மாதம் மரகதம் குமரவேல் தாக்கல் செய்த வருவாய் தொடர்பான விவரங்களும், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பிரமாணப் பத்திரத்திலும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அது ஏப்ரல் மாதம், இது அக்டோபர் மாதம் என்று நிச்சயம் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், இந்த நான்கு, ஐந்து மாதங்களில் நடந்த வேறுபாடாக இருந்தால் அதனை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.

ஆனால், கடந்த 2021 - 22, 2022 - 23, 2023 - 24 மற்றும் 2024 - 25ஆம் ஆண்டுகளில் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவரின் வருவாய் தொடர்பான தகவல்களில் மிகப்பெரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாம்.

தான் கடந்த 2024 - 25ஆம் ஆண்டு ரூ.12.57 லட்சம் வருவாய் ஈட்டியதாக ஏப்ரல் மாத பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்த மரகதம் குமரவேல், தற்போதைய பிரமாணப் பத்திரத்தில் இந்த வருவாய் ரு.5.87 லட்சம் என்று மாற்றியிருக்கிறார்.

அவரது கணவர் குமரவேலுவின் ஆண்டு வருவாய் ரூ.30 லட்சம் என்று ஏப்ரலில் கூறியிருந்த நிலையில், ஆக். மாத பிரமாணப் பத்திரத்தில் ரூ.5 லட்சம் என்று மாற்றியிருக்கிறார்.

ஏப்ரல் மாதத்துக்கும் செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்துக்கும் சுமார் ரூ.25 லட்சம் வருவாய் வேறுபாடு ஏற்பட்டுள்ளது எப்படி என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER