மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு: மு.க. ஸ்டாலின் தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் விஜய்

அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!

அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயம்.

Annan Seer scheme coming soon

தலைமைச் செயலகம் / அண்ணன் சீர் திட்டம் - கோப்புப் படம்

Updated On :

அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம் என்றும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் வரும்வரை மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று ‘அண்ணன் சீர்’ திட்டம். இந்தத் திட்டம் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு பவுன் (8 கிராம்) தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை ஆகியவை வழங்கப்படவுள்ளன.

இதற்கான நிகழ் நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தகுதியான ஒப்பந்ததாரர் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Summary

The Tamil Nadu government has said that Aadhaar is mandatory to benefit from the Annan Seer scheme and that eligible women must submit their Aadhaar number.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER