போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வர் விஜய்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

முதல்வர் விஜய் தேடப்படும் குற்றவாளியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்

Published On :

முதல்வர் விஜய் தேடப்படும் குற்றவாளியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக வெற்றி கழகத்தையும், காவல்துறையின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், ”காவல்துறையால் தேடப்படும் நபர் என கூறப்படும் அசோக், தமிழக முதல்வருடன் மாட்டு வண்டியில் எவ்வாறு பயணம் செய்தார்? இந்த விவகாரத்தில் காவல்துறை ஏன் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ”தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா, குழந்தைகளை பயன்படுத்தி திமுகவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில் காவல்துறை மௌனம் காத்தது ஏன்? இந்த இரண்டு விவகாரங்களிலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேநேரம், முன்னாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழகக் காவல்துறையினர் அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்தது ஏன்?

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே, தேடப்படும் குற்றவாளி என கூறப்படும் நபருடன் செல்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று பொதுமக்களுக்கு தேவையில்லை” என்று பேசியுள்ளார்.

Summary

Chief Minister Vijay with a criminal wanted by the police: R.S. Bharathi's allegation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.