
வாக்குத் திருட்டு மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலை! முதல்வர் விஜய் இதுபற்றி பேச வேண்டும்! மு. வீரபாண்டியன்
எஸ்ஐஆர், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் முதல்வர் விஜய் பேச வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்...
முதல்வர் விஜய் | சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
எஸ்ஐஆர் விவகாரம், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் முதல்வர் விஜய் பேச வேண்டும், கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மு. வீரபாண்டியன்,
"தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பு. ஆனால் எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்திருக்கிறார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர் இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக ஆகிய 3 கட்சிகளும் பணம் கொடுக்கின்றனர். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கணக்கெடுகிறார்கள். இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் யாரும் மக்களைச் சந்திக்கவில்லை. மற்ற கட்சிகளிடம் அரசியல் இல்லை. வெறுமனே தலைவர்கள் வந்து பேசிவிட்டுச் செல்கின்றனர். நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் முதல்வர் விஜய் பேச வேண்டும், கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் இதுபற்றி கண்டிப்பாக பேச வேண்டும். வாக்குரிமை, போராடி பெற்ற உரிமை. முதல்வர் விஜய் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.
Summary
CM Vijay must speak about vote theft, SIR: M. Veerapandian
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







