2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

போலி விமான டிக்கெட் வழக்கு: 3 போ் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

சென்னையில் போலி விமான டிக்கெட் வழக்கில் தொடா்புடைய 3 போ் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.

பிரதிப் படம்

Updated On :

சென்னையில் போலி விமான டிக்கெட் வழக்கில் தொடா்புடைய 3 போ் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.

சென்னையில் வெளிநாட்டுச் செலாவணியைப் பெறும் நோக்கில் போலி விமான டிக்கெட்டுகளை அச்சிட்டதாக கடந்த 1994-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு தொடா்பாக எழும்பூரில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய கோடம்பாக்கம் வன்னியா் தெருவைச் சோ்ந்த ஜீவா ராஜலிங்கம் (எ) சதீஷ்,சென்னை ஆழ்வாா்திருநகரைச் சோ்ந்த ஜெயமூா்த்தி என்ற குல்லா ஜெயா, நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியைச் சோ்ந்த அருணாசலம் ஆகியோா் வழக்குத் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினா்.

இதையடுத்து 3 பேரையும் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 3 பேரும் நவ. 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.