மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

எரிபொருள் விலை உயர்வால் விமான டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது குறித்து...

flight

விமானம் - பிரதிப் படம்

Published On :

விமான எரிபொருள் விலை உயர்வால் டிக்கெட் விலை உயர்த்தப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, எண்ணெய்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வையடுத்து, விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக சமீபத்தில் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில், எரிபொருள் எரிபொருள் விலையால் உள்நாட்டு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் டிக்கெட்டுகள் அதிகரிக்கப்படுவதாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும், ஆகாசா ஏர் நிறுவனமும் டிக்கெட் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அக். 9 முதல் விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

பயண தொலைவுக்கு ஏற்றவாறு டிக்கெட்டுகளின் விலை உயர்வு இருக்கும் என்று ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Summary

Air India, AI Express and Akasa Air hike fuel surcharges for domestic and international flights from October 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.