காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

மேக்கேதாட்டு அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடகம்! மார்ச் மாதத்துக்குள் அடிக்கல்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு அடிக்கல் நாட்டவிருப்பது குறித்து...

Cauvery River

மேக்கேதாட்டு அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடகம் - ENS

Published On :

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டவிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக இருந்து வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு, டெல்டா விவசாயம் பெருமளவில் பாதிப்படையும். இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

சமீபத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசுதான் அனுமதி தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழகம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக மேக்கேதாட்டு அணையை எதிர்த்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் எங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை பெற்றுள்ளன. அவர்கள் அதனை ஆய்வு செய்வார்கள். இந்த விவகாரம் இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது.

தமிழக அரசின் அனுமதி தேவையில்லை, என்றும் கர்நாடக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஜல் சக்தித்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதில் முனைப்பாக இருப்பதை காணும்போது மத்திய பாஜக அரசு மறைமுகமான அனுமதியை வழங்கி உள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி நீர்வரத்து இல்லாமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விடவில்லை. இந்த சூழலில், மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வஞ்சகமான முறையில் கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Mekedatu project launch by March next year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.