ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!
ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்றார்.
எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டு வெளியேறிய தோனி, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பொறுப்பை ஒப்படைத்தார்.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றாலும், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட தோனி விளையாடவில்லை.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்றே கடைசி நாளாகும்.
இந்த நிலையில், தோனியை மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவிய நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
OFFICIAL ANNOUNCEMENT ð¦ð
— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2026
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever ð
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS⦠pic.twitter.com/TA5Qfrq4dI
சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என். சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கேஇல்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, வெற்றிகள், சவால்கள் என அனைத்திலும் நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வளர்ந்து வந்துள்ளோம்.
எங்கள் பிணைப்பு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவரின் நோக்கங்களைச் சந்தேகப்படுவதில்லை. அந்த நம்பிக்கையே இந்த நீண்ட பயணத்தைச் சாத்தியமாக்கியது.
2008-ல், தோனி சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது நான் எடுத்த மிகச் சிறந்த முடிவாக அமைந்தது. அவர் இந்த அணிக்காகப் பெற்றுத் தந்த சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவர் ஒரு மனிதராக எத்தகைய சிறந்த பண்புகளைக் கொண்டவர் என்பதற்காகவும் நான் இதைச் சொல்கிறேன்.
தோனி எப்போதும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாகவே இருப்பார். இந்த இடம் எப்போதும் அவருக்குச் சொந்தமான இல்லமாகவே இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"ðð«ð®ð¬ð ð¢ð¬ ð°ð¡ðð ð¦ððð ðð¡ð¢ð¬ ð£ð¨ð®ð«ð§ðð² ð©ð¨ð¬ð¬ð¢ðð¥ð." pic.twitter.com/LA97JA5s9W
— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2026
Summary
Dhoni retires! Appointed as advisor for Chennai Super Kings!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


