புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!சென்னை உயர்நீதிமன்றம் அருகே சாலைத் தடுப்பில் மோதி அரசுப் பேருந்து விபத்து!‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

மைக் ஹஸ்ஸி, சிம்மன்ஸ் அதிரடி நீக்கம்... சிஎஸ்கேவில் ஒரே நாளில் 5 பயிற்சியாளர்கள் விடுவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வலுவான அணிகளில் முதன்மையான அணியாகக் கருதப்பட்ட ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த மூன்று தொடர்கள் சரியாக அமையவில்லை.

2024-ல் 5-வது இடத்தையும், 2025-ல் பத்தாவது இடத்தையும், 2026-ல் 8-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றமளித்த சென்னை அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹஸ்ஸி உள்பட ஐந்து பேரையும் விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

2008-ல் சிஎஸ்கே அணியில் வீரராக இணைந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி, ஆறு சீசன்கள் சென்னை அணிக்காக விளையாடினார்.

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, 2018-ஆம் ஆண்டில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்குடன் இணைந்து பேட்டிங் பயிற்சியாளரானார்.

அவரது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் சென்னை அணி 2018, 2021 மற்றும் 2023-ல் சாம்பியன் பட்டங்களை வென்றது. இதில் மை ஹஸ்ஸி முக்கிய பங்காற்றியிருந்தார்.

மைக் ஹஸ்ஸி மற்றும் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் சேர்த்து, பீல்டிங் மற்றும் உதவி பேட்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார், தலைமை பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக், உடற்தகுதி பயிற்சியாளர் கிரெக் கிங் ஆகியோரும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Summary

Chennai Super Kings have parted ways with five coaching staff members, including the batting coach Michael Hussey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.