சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து விபத்து!
சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து...
சாலைத் தடுப்பில் மோதி நின்ற அரசுப் பேருந்து... - X
சென்னை உயர்நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை திருவிடந்தையில் இருந்து தீவுத்திடல் வந்த 109ஏ பேருந்து, சென்னை உயர்நீதிமன்றம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலைத் தடுப்பில் மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சென்னை உய்ரநீதிமன்ற வளாகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் கார்கள் உள்பட 10 கார்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து விபத்துக்குள்ளான என்எஸ்சி போஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Government bus accident near the Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


