
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதைப் பற்றி...
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் திமுக அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
விசாரணையை கடலூர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரிய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Summary
The Madras High Court has dismissed the petition filed by former Minister M.R.K. Panneerselvam and his family members seeking discharge from the disproportionate assets case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





