இங்கிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்த சிஎஸ்கே பயிற்சியாளர்கள்! ஃபிளெமிங்கின் திட்டமா?
சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்கள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

ஸ்டீஃபன் பிளெமிங் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்கள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீஃபன் பிளெமிங் அண்மையில் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
Stephen Fleming and Brendon McCullum have confirmed their staff ð
— England Cricket (@englandcricket) October 12, 2026
Full story here: https://t.co/cjLf7uN7Aj pic.twitter.com/4GQLHd36CF
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த எரிக் சிம்மன்ஸ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார்.
அவர் மட்டுமின்றி, ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஃபோஸ்டரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக எரிக் சிம்மன்ஸும், பயிற்சியாளர்கள் குழுவில் ஜேம்ஸ் ஃபோஸ்டரும் இணைந்துள்ளதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸில் தன்னுடன் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்ற பயிற்சியாளர்களுடன் இணைந்து ஸ்டீஃபன் பிளெமிங் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பைத் தொடரவுள்ளார்.
சிஎஸ்கேவில் புதிதாக பயிற்சியாளர்கள் குழு நியமிக்கப்படலாம் என்பதால், ஸ்டீஃபன் பிளெமிங் தன்னுடன் இருந்த பயிற்சியாளர்களை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
Summary
The coaches of Chennai Super Kings have joined the coaching staff of the England team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


