நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!

மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

TN CM Vijay

முதல்வர் விஜய்

Updated On :

எஃப்ஐடிஇ உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ மற்றும் மூன்றாம் இடம் பிடித்த செஸ் வீராங்கனை நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், வெனிசுலா நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக ஜூனியர் (U-20) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister congratulates the players who won the Women’s Chess Championship title!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.