திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!குமரகோட்டம் முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! மலர்களால் அலங்காரம்!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!உச்ச நீதிமன்றம், நீங்கள் விளையாடும் கார் பொம்மைபோல அல்ல! இபிஎஸ் விமர்சனம்திருப்பரங்குன்றம் தீபம்: மதுரை வந்தடைந்த முன்னாள் நீதிபதிகள்!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுகோவையில் பறவை காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்திருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்

நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டு

நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகத்தில் டயர்கள் இல்லாததால் இயக்கப்படாமல் உள்ள பேருந்துகள் பற்றி அன்புமணி குற்றச்சாட்டு

12.10.2026: TIRUNELVELI: STANDALONE:- To prevent two-wheelers, cars and autos from entering and occupying bus bays at Tirunelveli New Bus Stand, the e

போக்குவரத்துக் கழகம் - ENS

Updated On :

தமிழ்நாட்டில் டயர்கள் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் முடங்கியிருப்பதாகவும், உடனடியாக டயர்களை வாங்கி விபத்தின்றி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரு மாதங்களாக டயர்கள் வாங்கப்படாததால், 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; அதுமட்டுமின்றி, பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாகவும் வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. மக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகளை இயக்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் என மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு சொந்தமான 317 பணிமனைகளிலிருந்து 21,198 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த விடியல் பயணத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டமாக மாற்றப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படாததால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்கப்படாததன் காரணமாக பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது.

அதுவே சரி செய்யப்படாத நிலையில்தான் டயர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் 5 முதல் 10 பேருந்துகள் வீதம் மாநிலம் முழுவதும் 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளுக்கு 2 அல்லது 3 பேருந்துகள் சென்று வந்தால், அதில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், மக்கள் அவசரத் தேவைகளுக்காகக் கூட நகரப்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசால் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, கிராமப்புற பெண்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வாழ்வாதாரம் ஈட்ட வேண்டும் என்பதுதான். அரசுப் பேருந்துகள் முடங்கிக் கிடப்பதால் தமிழக அரசின் நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னொருபுறம், பழுதடைந்த டயர்களைக் கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பஞ்சர் ஆகுதல், டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதல் என பல வகையான விபத்துகளுக்கு உள்ளாகின்றன. டயர்கள் கொள்முதலுக்கான புதிய டெண்டர்கள் கடந்த 8 மாதங்களாக கோரப்படாததும், அதனால் புதிய டயர்களை வழங்க டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்து விட்டதும்தான் இந்த சிக்கலுக்கு காரணமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான டயர்களை கொள்முதல் செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். அதன் மூலம் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களுக்கு, அடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் வரை பழைய விலையில் டயர்களை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டயர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோரப்பட்டன. அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அதன் பிறகும் செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட விலையில் டயர்களை வழங்கிய நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டதாகக் கூறி, கடந்த இரு மாதங்களாக டயர்களை வழங்க மறுத்து விட்டன.

டயர்கள் கொள்முதலுக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாததற்கு காரணம், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடி தான். அரசிடமிருந்து வழங்கப்பட வேண்டிய மானியம் உள்ளிட்ட நிதி உதவிகள் வழங்கப்படாததால்தான் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலை உடனடியாக சரி செய்யப்படாவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் நிலை மேலும் மோசமாகிவிடும்.

கிராமப்புறங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் அரசுப் பேருந்துகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவைதான் கிராமப்புறங்களின் மனித வளத்தையும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் நகரங்களுக்கு கொண்டு சென்று, வருவாய் ஈட்ட உதவுவது அரசுப் பேருந்துகள் தான். எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்கவும், அதைக் கொண்டு உடனடியாக டயர்களை கொள்முதல் செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளை விபத்தின்றி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.