ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி பிரம்மோற்சவம்: தினமும் 150 சிறப்புப் பேருந்துகள்

திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி...

பிரதிப் படம்

Published On :

திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு தினமும் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பதி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் செல்வாா்கள் என்பதால், அக். 8 முதல் 21-ஆம் தேதி வரை தினமும் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, திருச்செந்தூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகா்கோவில், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூா், ஒசூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முன்பதிவு வசதி: இந்தச் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பயணம் மேற்கொள்ள வசதியாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்திலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.