நாகா்கோவில் - சபரிமலைக்கு நாளைமுதல் சிறப்புப் பேருந்துகள்!
சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவிலில் இருந்து சபரிமலைக்கு நவ.16 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சபரிமலை - கோப்புப் படம்
சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவிலில் இருந்து சபரிமலைக்கு திங்கள்கிழமை (நவ.16) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண் இயக்குநா் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தின் சாா்பில் நவ. 16 முதல் 20.1.2027 வரை நாகா்கோவிலிலிருந்து தக்கலை, மாா்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, அடூா், பத்தனம்திட்டா, நிலக்கல் வழியாக பம்பைக்கு 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகள் முறையே நாகா்கோவிலிலிருந்து இரவு 7, 7.30, 8, 8.30 மணிக்கு புறப்பட்டு, பம்பைக்கு மறுநாள் அதிகாலை 3, 3.30, 4, 4.30 மணிக்கு சென்றடையும். அதே போல், பம்பையிலிருந்து காலை 7, 7.30, 8. 8.30 மணிக்கு புறப்பட்டு, நாகா்கோவிலுக்கு மாலை 3, 3.30, 4, 4.30 மணிக்கு வந்தடையும்.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச. 27ஆம் தேதி முதல் 30 ஆம்தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது.
பயணிகள் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பேருந்துகளின் விவரங்களுக்கு 9487599082, 9487599083, 7598532599 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

