கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்வது பற்றி...

CM Vijay

முதல்வர் விஜய் - IANS

Updated On :

தவெக கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தும் இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவும் தெரிவித்தன.

இதனிடையே, தவெக அமைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுகவும் இணைந்தன. இருப்பினும், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வெளியில் இருந்து ஆதரவளித்து வருகின்றன.

ஜூலை 1-ல் தவெக கூட்டணிக் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, செப். 9-ல் இரண்டாவது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று தவெக கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் விஜய்யின் பாமணி முகாம் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் பங்கு பெற்றுள்ளனர்.

அமமுக எம்எல்ஏ காமராஜும் இதில் கலந்துகொண்டுள்ளார். அதேநேரத்தில் காட்டுமன்னார் கோயில் விசிக எம்எல்ஏ ஜோதிமணி மட்டும் பங்கேற்கவில்லை.

தொகுதி வளர்ச்சி பணி, நிதி ஒதுக்கீடு குறித்து பேசப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Summary

CM vijay meeting with tvk alliance and support MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.