மாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துவது பற்றி...
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார்.
தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் இன்று (நவ. 11, புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், தனியார் விடுதிக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர். எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், அவர்களின் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவது, தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அதுகுறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நூற்றுக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் கூட்டம் நடைபெறும்அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக எம்எல்ஏக்கள் மாமல்லபுரம் தனியார் விடுதியில் 3 நாள்கள் தங்கவைக்கப்பட உள்ளதாக வெளியான செய்தி குறித்த அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.
Summary
CM vijay meeting with TVK MLAs in Mamallapuram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

