தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் - File photo
ஒருவர் தனது தந்தையின் பரம்பரை சொத்து அல்லது தானே சுயமாக சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே முழு உரிமையாளராக இருக்க முடியும். மேலும், அந்த சொத்துகளை தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தந்தையின் சொத்தில் உரிமை கோரி, அவரது மகன் தொடர்ந்த 29 ஆண்டு கால சட்டப்போராட்டத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.
தன்னுடைய தந்தைக்கு பரம்பரை சொத்திலிருந்து கிடைத்த பங்கில் உரிமை கோரி மகன் கடந்த 1997ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகனின் மகன், பரம்பரை சொத்தில் நேரடியான பங்குதாரராக இருக்க முடியாது, தந்தைக்கு, தாத்தா பிரித்துக் கொடுத்த சொத்தில், பேரனால் உரிமைக்கோர முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொத்துகள் பற்றி உயில் எழுதாமல் இறக்கும்பட்சத்தில், வாரிசுரிமை விதிகளை வரையறுக்கும் சட்டப்பிரிவு 8-ஐக் குறிப்பிட்டு, ஒரு மகன் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட சொத்தின் முழு உரிமையாளராக மாறுகிறான் என்றும், அதே வேளையில் அவனது சொந்த மகனுக்கு அந்தச் சொத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நேரடியான வாரிசுரிமை என்பது மகனை மட்டுமே குறிக்கும், மகனின் மகனை எந்த வகையிலும் வாரிசுரிமை பெற்றவர் என குறிப்பிட முடியாது, எனவே, தாத்தாவின் சொத்தில், பேரன் எந்த வகையிலும் உரிமைகோர முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
Summary
A grandson cannot claim a share in property gifted by his grandfather! Supreme Court ruling
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

