கைதான 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ப. சிதம்பரம்

ஒருவர் கைதான 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ப. சிதம்பரம் கூறியிருப்பது தொடர்பாக...

I welcome the Supreme Court...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் - கோப்புப்படம்

Updated On :

‘கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன் ஆஜா்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு என்பது, அந்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் எடுக்கும் கணத்திலிருந்தே தொடங்குகிறது. மாறாக, அவரை முறைப்படி கைது செய்யும் நேரத்திலிருந்து அல்ல’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 4 நபா்களுக்கு திரிபுரா உயா்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது.

ப. சிதம்பரம் வரவேற்பு

இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் மற்றும் காவலில் வைப்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை தவறு என்று உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்திருப்பதை காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் 5.11.2026 தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பைத் தவறு என்று முடிவெடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

'காவல்' வேறு, 'கைது' வேறு என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு வியப்பளித்தது.

அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரை ஒரு மனிதனைக் 'காவலில்' வைப்பதும் 'கைது' செய்வதும் ஒன்று தான் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மனித உரிமையையும் அடிப்படை உரிமையையும் நிலை நாட்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

I welcome the Supreme Court's verdict: P. Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.