சிஜேபி போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சிஜேபி போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது பற்றி...

உச்ச நீதிமன்றம் - ANI
தில்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இன்று நடைபெறும் கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) கட்சியினரின் போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தால் பண்டிகை காலங்களில் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கன்னாட் பிளேஸ் வியாபாரி உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமான சூழல் உருவானால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
Summary
Supreme Court refuses to stay CJP's protest!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


