கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தொகுதி மறுவரையறை மசோதா! அக்டோபர் இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு?

அக்டோபர் இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூடவுள்ளதாக வெளியாகும் தகவல் பற்றி...

Parliament

நாடாளுமன்றம் - ANI

Updated On :

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற இந்த மாத இறுதியில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆக.13 வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் என்ற ஊகங்கள் வெளியாகின. ஆனால், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் கொண்டுவரப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆக.13-இல் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவா்களால் ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத் தொடா் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பிறகு 4-5 நாள்களில் கூட்டத் தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பை குடியரசுத் தலைவா் வெளியிடுவாா். ஆனால், மழைக்கால கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டு 2 மாதங்களாகியும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனால் புதிய அமா்வை கூட்டாமலேயே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது என்ற ஊகங்கள் வலுவடைந்த நிலையில், அக்டோபர் இறுதியில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு போதிய ஆதரவு?

2029 மக்களவைத் தோ்தலில் இருந்து 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்குவதுடன், அதற்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு அமா்வில் கொண்டுவரப்பட்டது.

அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. ஆனால், மசோதா மீதான வாக்கெடுப்பில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெறாததால் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், மீண்டும் மசோதாக்களை தாக்கல் செய்யும் போது, அதனை நிறைவேற்ற தேவையான ஆதரவை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக, திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா கூட்டணியிலிருந்து விலகியுள்ள திமுகவின் 22 எம்.பி.க்கள், சிறிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஆகியோரின் ஆதரவையும் உறுதி செய்ய மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதாவில் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று திமுக எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் ஆதரவை உறுதி செய்ய, அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவிகித தொகுதிகள் அதிகரிப்பு என்ற அம்சத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Summary

Constituency Delimitation Bill! A special session of Parliament at the end of October?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.