ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தில்லியில் நாளை சிஜேபி போராட்டம்! தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் சிஜேபியின் போராட்டத்துக்குத் தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு...

Delhi HC refuses to restrain CJP's protest at Connaught Place on Friday

சிஜேபியின் போராட்டத்துக்குத் தடை விதிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு... - கோப்புப் படம்

Updated On :

தில்லியில், கன்னாட் பிளேஸ் பகுதியில் நாளை நடைபெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) போராட்டத்துக்குத் தடை விதிக்க, தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி போராட்டத்தை காவல் துறையினர் முறைப்படுத்த வேண்டுமெனக் கோரி கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது இன்று தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நிதின் வசுதியோ சம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தில்லி காவல் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதன் அடிப்படையில், அதிகாரிகள் உறுதியளித்துள்ளதால், சிஜேபி மற்றும் அபிஜீத் தீப்கே போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை வரும் நவ. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

The Delhi HC has refused to impose a ban on the protest planned for tomorrow by the cjp in the Connaught Place area of ​​Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.