கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 25) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 25) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், சரவணன் ஆகிய மூவரையும் சேர்த்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

மானாமதுரை, லால்குடி சட்டப்பேரவை தொகுதிகளின் எம்எல்ஏக்கள் வெற்றிக்கு எதிரான தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.

Summary

Cases including former minister Anbil Mahesh, 'Periyar Arivulagam' book procurement scam—are set to come up for hearing in the Madras High Court today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.