ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி!
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி குறித்து...

மகளிர் இந்திய அணியுடன் பிரதமர் மோடி. - படம்: எம்ஐபி இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் பல்வேறு ஜெர்ஸிகளும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய அணி 21 தங்கம் உள்பட 85 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலிலும் நான்காம் இடம் பிடித்து அசத்தியது.
பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை மேஜர் தயான் சந்த் திடலில் நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர், ஐசிசி தலைவர் ஜெய் ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது:
நீங்கள் 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தி உள்ளீர்கள். இந்தியாவின் மூவர்ண கொடியை உயர பறக்க வைத்ததுதான் மிகப்பெரிய வெற்றி. அதனால்தான் இந்த வெற்றி உங்களுடையது மட்டுமே அல்ல; அது கோடிக்கணக்கான இந்திய மகள்ளுக்குமானது.
இந்திய நாட்டின் மக்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகள். குறிப்பாக நமது பெண் வீராங்கனைகளுக்கு வாழ்த்து சொல்கிறேன். ஏனெனில், 38 பதக்கங்களில் 11 பதக்கம் மகளிர் வென்றுள்ளார்கள். கிரிக்கெட், ஹாக்கி, வில்வித்தையில் தங்கம் வென்றவர்களுக்கு கூடுதல் வாழ்த்துகள் என்றார்.
PM @narendramodi interacts with the participants of Asian Games 2026 https://t.co/CgEjBX67r7
— Ministry of Information and Broadcasting (@MIB_India) October 15, 2026
Summary
PM meets Asian Games medal winners; lauds strong performance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


