'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

ஆடவர் ஹாக்கியில் தங்கம்..! வரலாற்று வெற்றியுடன் பதக்கப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணி குறித்து...

Indian men's hockey team

இந்திய ஆடவர் ஹாக்கி அணி - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்

Published On :

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று கால்பகுதிகளில் (11, 23, 42ஆவது நிமிஷங்களில்) தலா ஒரு கோல் அடித்து அசத்தியது.

மலேசிய அணி ஆறுதலாக முதல் காலிறுதிப் பகுதியில் 14ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தது. பின்னார், நான்காம் கால்பகுதியில் இந்திய அணி 54, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 5-1 என அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியுடன் ஆடவர் ஹாக்கி அணியும் ஒலிம்பிக் 2028க்குத் தேர்வாகியுள்ளது. ஆசிய விளையாட்டில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வென்று சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்தியாவுக்கு 84 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் அதில் 21 தங்கம்,  26 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பதக்கப் பட்டியலில் இந்தியா முதல்முறையாக நான்காவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் ஐந்தாவது இடத்துக்கு கீழிறங்கியது.

Summary

India wins gold in men's hockey..! Moves up to 4th place in the medal tally!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER