
வெண்கலம் வென்ற தீபக் புனியா..! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 83!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா குறித்து...

இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 97 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியாவும் மங்கோலிய வீரர் கான்குயாக் கன்பாடர் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதலில் தீபக் புனியா 2-0 என முன்னிலை வகித்தார். பின்னர், கன்பாடர் 1-2 என மீண்டெழுந்தார். இறுதியில் தடுப்பாட்டத்தில் அசத்திய தீபக் புனியா 2-1 என வென்றார்.
இந்த வெற்றியுடன் இந்தியாவுக்கு 83 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் அதில் 20 தங்கம், 26 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கிடைத்தால், பதக்கப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை முந்தி நான்காவது இடம் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Deepak finished with a bronze! ð¥ð®ð³
— Olympic Khelâ⢠(@OlympicKhel) October 3, 2026
Indiaâs 97kg freestyle wrestler finishes his #AichiNagoya2026 campaign on the podium. ð#AsianGames pic.twitter.com/9sVqFIMHGm
Summary
Asian Games 2026: Deepak Punia won the bronze medal in wrestling, indias medal count 83
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






