மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

இந்திய வீரர் தீபக் சாஹரின் ரூ. 1.5 லட்சம் கிரிக்கெட் பேட்டுகள் திருட்டு!

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கிரிக்கெட் மட்டைகள் திருடப்பட்டுள்ளதைப் பற்றி...

விடியோ வெளியிட்ட தீபக் சாஹர்.

Published On :

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் கிரிக்கெட் மட்டைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவரும் தீபக் சாஹர், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் சாஸ்திரிபுரம் திடலில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய பிளேயர் எடிசன் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மூன்று மட்டைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக தீபக் சாஹர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோ பதிவில், “நேற்று மாலை இங்கிருந்து 3 பேட்டுகள் திருடப்பட்டுவிட்டன. நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவை மிகவும் நல்ல பேட்டுகள்.

அவற்றைத் திருடியவருக்கு அவை எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதுகூடத் தெரியாது. கிரிக்கெட் மட்டைகளைத் திருடியவர்களுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. அவர் அதை யாரிடமாவது விற்றுவிடுவார் அல்லது டென்னிஸ் பந்தில் விளையாடி வீணடித்துவிடுவார்.

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? போலீசில் புகார் அளிக்கவா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஜி அல்லது பிரதமர் மோடிஜியிடம் செல்லவா? அல்லது திருடனுக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லி நேரடியாகக் கடவுளிடமே வேண்டிக்கொள்ளவா?” என்றார் தீபக் சாஹர்.

Summary

Indian cricketer Deepak Chahar has recently shared a video after three of his bats were allegedly stolen from a practice ground. The three bats, which Chahar described as expensive player-edition bats, were worth around Rs 1.5 lakh in total, according to him

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.