
இந்தியாவுக்கு 48ஆவது பதக்கம்: இரண்டாவது முறையாக வெண்கலம் வென்ற ராணுவ வீரர்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் குறித்து...

குத்துசண்டை வீரர் நரேந்தர் பர்வால் - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026ல் இந்திய குத்துசண்டை வீரர் நரேந்தர் பர்வால் வெண்கலம் வென்றுள்ளார். இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை நரேந்தர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடவருக்கான குத்துச்சண்டை 90க்கும் அதிகமான எடைப் பிரிவில் அரையிறுதியில் இந்தியாவின் நரேந்தர் பர்வால் - உலக சாம்பியனும் கஜகஸ்தான் வீரருமான அபேக் ஆரல்பே மோதினார்கள்.
இந்தப் போட்டியில், இந்திய வீரர் சில எதிரடிகளை அடித்தாலும் கஜகஸ்தான் வீரருக்கு 5-0 என நடுவர்கள் சாதகமான தீர்ப்புகளை வழங்கினார்கள்.
இந்தப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் தடுப்பாட்டத்தில் அசத்தியதுடன் தேவையானபோது வலுவான குத்துகளையும் குத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருக்கும் இவர் சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். முன்னதாக, 2023 ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 48 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 5 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் கிடைத்துள்ளன.
Second #AsianGames medal for Narender! ð®ð³
— Olympic Khelâ⢠(@OlympicKhel) September 29, 2026
Indiaâs boxer adds another bronze medal to his collection at #AichiNagoya2026. ð¥ð pic.twitter.com/Ny3vmP2ZUu
Summary
India’s boxer Narender Berwal adds another bronze medal to his collection at Aichi Nagoya 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






