
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தார் நீரு!
ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரு தண்டாவை பற்றி...
நீரு தண்டா. - பிடிஐ
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடரின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டு மகளிருக்களுக்கான தனிநபர் டிராப் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் நீரு தண்டா கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
30 புள்ளிகளுக்கு 28 என்ற கணக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நீரு தண்டா, இறுதிப் போட்டியிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீனாவின் சுன் யுனோங், 30-க்கு 26 புள்ளிகளைப் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் குவைத்தின் ஹஜார் அப்துல்மாலிக் 21 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு, ஆஷிமா அஹலாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் அடங்கிய கூட்டணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றிய நிலையில், தங்கப்பதக்கத்தையும் வென்று நீரு அசத்தியுள்ளார்.
பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங்கில் தங்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றுச் சிறப்பையும் நீரு தண்டா பெற்றுள்ளார்.
இந்தியா 5 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலத்துடன் மொத்தமாக 47 பதக்கங்களுடன் 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Summary
Asian Games 2026: Neeru Dhanda took up shooting after watching her cousin Lakshay Sheoran win an Asian Games medal in 2018. On Tuesday in Aichi-Nagoya, the 26-year-old from Jind became the first Indian woman to win gold in the women's trap event at the Asian Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



