
வில்வித்தையில் வெண்கலம் வென்ற நீரஜ்..! இந்தியாவுக்கு 80ஆவது பதக்கம்!
ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சௌஹான் குறித்து...

இந்திய வீரர் நீரஜ் சௌஹான் - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
ஆசிய விளையாட்டில் தனிநபர் ஆடவருக்கான ரிகர்வ் வில்வித்தையில் இந்திய வீரர் நீரஜ் சௌஹான் வெண்கலம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தனிநபர் ஆடவருக்கான ரிகர்வ் வில்வித்தை இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சௌஹான் மற்றுமொரு இந்திய வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
இந்தப் பிரிவில் தென்கொரியாவின் லீ வூ சீக் தங்கமும் ஜப்பான் வீரர் ஜூன்யா நகானிஷி வெள்ளிப் பதக்கமும் வென்றார்கள்.
இத்துடன் இந்தியாவுக்கு 80 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 18 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
Bronze for Neeraj Chauhan! ð¥ð®ð³
— Olympic Khelâ⢠(@OlympicKhel) October 3, 2026
In an all-India bronze medal match in Recurve Men's Archery, Neeraj Chauhan scripts a brilliant come-from-behind victory over compatriot Dhiraj Bommadevara to finish on the podium at #AichiNagoya2026.#AsianGames pic.twitter.com/nywwujLYHN
Summary
In an all-India bronze medal match in Recurve Men's Archery, Bronze for Neeraj Chauhan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






