
இந்தியாவுக்கு 63ஆவது பதக்கம்..! வில்வித்தையில் வெண்கலம் வென்ற கணேஷ் மணி ரத்னம்!
ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் கணேஷ் மணி ரத்னம் குறித்து...

இந்திய வீரர் கணேஷ் மணி ரத்னம் - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
ஆசிய விளையாட்டில் வில்வித்தையில் இந்திய வீரர் கணேஷ் மணி ரத்னம் திருமூரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 63 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
வில்வித்தையில் ஏற்கெனவே இந்திய அணி கோல்டன் ஹாட்ரிக் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ் மணி ரத்னம் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தையில் நான்காம் இடம் பிடித்தால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 150 புள்ளிகள் பெறக்கூடிய நிலையில் 149 புள்ளிகள் எடுத்து வியட்நாம் வீரரை 149-144 என்ற புள்ளிகளில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
இந்த வெற்றியுடன் இந்திய அணிக்கு 63ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதில் 10 தங்கம், 22 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசையில் இந்தியா எட்டாவது இடத்துக்கு பின் தங்கியது.
முன்னதாக கணேஷ் 2019 உலக கலப்பு அணியினரில் பங்கேற்று வெண்கலம் வென்றிருந்தார். கடந்த புதன்கிழமை தங்கம் வென்ற வில்வித்தை அணியிலும் கணேஷ் பங்கேற்றிருந்தார். அதனால், இது அவருக்கு நடப்பு ஆசிய விளையாட்டில் இரண்டாவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The archers keep delivering! ð¹ð®ð³
— Olympic Khelâ⢠(@OlympicKhel) October 1, 2026
Indiaâs Ganesh Mani Ratnam Thirumuru beats Cong Duc Dang 149-144 to win bronze in the menâs individual compound event at #AichiNagoya2026. ð¥ pic.twitter.com/tBE8tRdAWK
Summary
Asian Games 2026: India’s Ganesh Mani Ratnam Thirumuru beats Cong Duc Dang to win bronze
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







