மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

இந்தியாவுக்கு 33ஆவது பதக்கம்: 0.01 விநாடிகள் வித்தியாசத்தில் வெண்கலம் வென்ற ஹரிதா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் வெண்கலம் வென்ற ஹரிதா குறித்து...

Indian sportswoman Haritha Bhadra

இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 200 மீ. தடகளத்தில் இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா வெண்கலம் வென்று அசத்தினார். இதில் இவர் 0.01 விநாடிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை தக்க வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மகளிருக்கான 200 மீ. தடகளத்தில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஹரிதா பத்ரா 23.20 விநாடிகளில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா 22.78 நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்றார். சீனாவின் சென் யூஜி 22.93 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றார்.

இந்திய வீராங்கனை ஹரிதா 0.01 நொடிகளில் ஜப்பான் வீராங்கனையை முந்தி பதக்கம் வென்றார். இலக்கை அடைய ஜப்பான் வீராங்கனை 23.21 விநாடிகள் எடுத்துக்கொள்ள, இந்திய வீராங்கனை 23.20 விநாடிகள் எடுத்துக்கொண்டதும் குறிப்பிடத்தகக்கது.

இத்துடன் இந்தியாவுக்கு 33 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் அதில் 4 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். குத்துச் சண்டையில் மூன்று பதக்கங்கள் உறுதியாகி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Sprinter Harita Bhadra, who clinched Asian Games 2026 women's 200m bronze by 0.01s

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER